டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2026-07-12 14:17 GMT

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூலாவரி, நாழிக்கல்பட்டி, வெடிக்காரன்புதூர், பாரப்பட்டி, பசுவவநத்தம்பட்டி வழியே மல்லூர் வரை அரசு டவுன் பஸ் (தடம் எண்72) இயங்கி வந்தது. இதனால் கிராம பகுதி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் மட்டுமின்றி அனைவரும் பயனடைந்தனர். மேலும் இந்த டவுன் பஸ் வாயிலாக விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளையும், பூ மார்க்கெட்டிற்கு பூக்களையும் கொண்டு சென்றனர். கொரோனா காலத்துக்கு பின் இந்த டவுன் பஸ் இயக்கவில்லை. இதனால் மக்கள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் டவுன் பஸ் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்