பஸ் வசதி

Update: 2026-07-12 18:19 GMT

கோபிசெட்டிபாளையத்தில் இருந்து காலேஜ் பிரிவு, பங்களாப்புதூர், டி.என்.பாளையம் நால்ரோடு, கே.என்.பாளையம் வழியாக இரவு 10.15 மணிக்கு இயக்கப்பட்டு வந்த 3ஏ என்ற அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இரவு 9.30 மணிக்கு 3பி மற்றும் 9.45 மணிக்கு 12-ம் எண் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதன்பின்னர் பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு 3ஏ அரசு பஸ்சை இரவு 10.15 மணிக்கு மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்