சங்கராபுரம் அருகே குளத்தூர் ரவுண்டானா அருகே சாலையின் இருபுறமும் அதிகளவில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடக்கூட இடவசதி இல்லாத நிலை உள்ளது. மேலும் இந்த செடிகளால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. வாகனஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?