கோத்தகிரி வ.உ.சி. நகரில் குடியிருப்புகளுக்கு செல்லும் நடைபாதையின் அருகில் உள்ள மின்கம்பம் சரியாமல் இருக்க கம்பி இணைக்கப்பட்டு நடைபாதையின் குறுக்கே அமைக்கப்பட்டு உள்ளது. உயரம் குறைவாக அமைந்துள்ள இந்த கம்பியில் இரவு நேரத்தில் செல்பவர்கள் மோதி தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அந்த கம்பியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.