திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிட்கோ அருகே ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றனர். சில சமயம் ஆங்காங்கே படுத்துக்கொள்கின்றன. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். விபத்து ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளால் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்லவேண்டியுள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.