சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 11-ஏ டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் கொரோனா காலத்துக்கு முன்பு வரை 4 நடைகளாக மஞ்சப்பாளிக்கும், கம்மாளப்பட்டிக்கும் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது 2 நடைகளாக அதே ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் அடுத்து வரும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே பழைய நேர அட்டவணைப்படியே 11-ஏ டவுன் பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.