பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2026-08-09 17:01 GMT
சிறுபாக்கம் அடுத்த அடரியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியாவது பொதுமக்கள் நலன் கருதி அங்கு பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி