வானூர் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கால்கடுக்க வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்லும் அவல நிலை தொடர்கிறது. இதை தவிர்க்க புதிய பயணிகள் நிழற்குடை அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.