சேலம் காகாபாளையத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வேம்படிதாளம் சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் சாலை வரையிலும் விளம்பர பலகை வைத்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.