சுண்ணாம்புக்கல் லாரிகள் இயங்க தடை

Update: 2026-09-20 13:56 GMT

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமத்தில் மழைக்காலங்களில் சுண்ணாம்புக்கல் லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக லாரிகள் இயங்குகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகள் சேறும், சகதியுமாக மாறுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விதிகளை மீறி இயங்கும் லாரிகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி