கோத்தகிரி அருகே சோலூர் மட்டம் கிராமத்தில் இருந்து மேட்டுப்பாளையம் அருகே தெங்குமரஹாடா கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் பழங்குடியின மாணவ-மாணவிகள் உள்பட பலரும் பயணிக்கின்றனர். ஆனால் அந்த அரசு பஸ் குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் அனைத்து தரப்பினரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அரசு பஸ்சை குறித்த நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.