பஸ் வசதி

Update: 2026-09-20 13:57 GMT

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய அரசு பஸ் வசதி இல்லை. காலை 6 மணி, 9 மணி, 11 மணி மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாலை 4 மணிக்கு பிறகு பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வீடு திரும்ப முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். மாலை நேரத்தில் அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்