போளூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் குண்ணத்தூர் கூட்ரோட்டில் அரசு பஸ்கள் நின்று செல்வதற்கு அனுமதி உள்ளது. ஆனால் ஒருசில பஸ்கள் நிற்பதில்லை. பயணிகளை ஏற்றாமல் சென்று விடுகின்றன. அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பொதுமக்கள் சரியான நேரத்துக்கு வேலை, மருத்துவமனை, பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பணிமனை மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்ணத்தூர் கூட் ரோட்டில் அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல உத்தரவிட வேண்டும்.
-பிச்சமுத்து, போளூர்.