சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2026-11-01 14:38 GMT

அரியலூர் பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் உள்ள மாவட்ட நூலகம், அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்குச் செல்லும் சாலையில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. சாலையோரம் படுத்திருக்கும் மாடுகள் திடீரென குறுக்கே வருவதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், அரசு மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்