வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2026-11-01 14:20 GMT

கோவை ரெயில் நிலைய பின்புறம் பெரியகடை வீதி அருகே சாலையோரத்தில் நடைபாதை அருகே குழி ஏற்பட்டு உள்ளது. அந்த குழி நாளுக்குநாள் விரிவடைந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். அங்கு விபத்தை தடுக்க இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், அது தற்காலிக தீர்வு மட்டுமே. சாலை துண்டிக்கும் முன்பாக அந்த குழியை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்