அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரியில் இருந்து அரியலூருக்கு காலை நேரங்களில் போதிய அரசு நகர பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பஸ்களில் ஏற முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்கள் நலன்கருதி காலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.