‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-11-01 14:48 GMT

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈ.பி. ரோடு, அண்ணா, எம்.ஜி.ஆர். சிலை பகுதிகள், பழைய பஸ் நிலையம், கீழராஜ வீதி, மேலராஜ வீதி, மார்த்தாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்து பாதுகாப்பாகப் பராமரித்து வருகின்றனர். மேலும், உரிய அபராதத் தொகை செலுத்தி மாடுகளை உரிமையாளர்கள் அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்