அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் அஸ்தினாபுரம் முதல் வி.கைகாட்டி - முத்துவாஞ்சேரி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்கு வருகிறது. இந்நிலையில் பெரியநல்லூர் பாதை முதல் வி.கைகாட்டி வரையிலான சாலையில் கனரக லாரிகள் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே சாலையில் லாரிகள் நிறுத்துவதை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.