பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையின் இரு புறமும் உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலும், தொடர்ந்து விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை குறைத்து, வாகனங்கள் தடை இன்றி செல்லவும், பரமத்திவேலூர் நான்கு ரோடு முதல் ஜேடர்பாளையம் வரை சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.