பஸ்சின்றி அவதி

Update: 2026-11-01 15:15 GMT

பெருந்துறை அருகே உள்ள சின்னமல்லம்பாளையம், வீராச்சிபாளையம் ஆகிய கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை. காலை 9 மணிக்கு மட்டும் பஸ் இயக்கப்படுகிறது. அதன்பின்னர் மறுநாள் காலை தான் பஸ் வருகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், கூலித்தொழிலாளர்கள், பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோபி-பெருந்துறை இடையே இயக்கப்பட்ட அரசு பஸ்சை நிறுத்திவிட்டனர். அந்த பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்