விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2026-11-01 14:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ரெயில்வே கேட்டில் ரெயில்கள் செல்லும்போது கேட் மூடப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அந்த நேரத்தில் எதிரெதிரே வரும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி இல்லாததால் முந்திச் செல்ல முயற்சிப்போர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்