சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தினமும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சூளகிரி அருகே சுண்டகிரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் கீழ் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அப்பகுதியில் மழைநீர் வடியும் வகையில் கால்வாய் அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.