திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் எஸ்டேட், முதல் பிரதான சாலை-திருமங்கலம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சிக்னல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிக்னல் சரிவர இயங்குவதில்லை. அந்த பகுதி இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதி என்பதால், சிக்னல் சரியாக இயங்காமல் போக்குவரத்தை சரிசெய்ய போலீசாரும் இல்லாததால், அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.