சேலம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் பிரிவில் புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. மல்லூர் டவுன் பகுதிக்கு செல்ல பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை உள்ளது. மேம்பாலம் தொடங்கும் முன்பு சர்வீஸ் சாலை பிரியும் இடத்தில் பெயர் பலகை இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் சென்று 4 கி.மீ. சுற்றி, மல்லூருக்கு வருவதால் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே சர்வீஸ் சாலை தொடங்கும் இடத்தில் மல்லூர் செல்லும் வழி என வழிகாட்டி பெயர் பலகை அவசியம் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.