ஓமலூர்-சங்ககிரி செல்லும் சாலையில் கார், இருசக்கர மற்றும் பஸ், கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்தச் சாலையில் சின்னப்பம்பட்டி அருகே உள்ள மூலக்கடை பகுதியில் இருந்து இளம்பிள்ளை, சேலம் செல்லும் பிரிவு சாலை பகுதியில் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்கு அமைக்க அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.