சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவுரோடு உள்ளது. ராசிபுரம், மல்லூர் பகுதிகளில் இருந்து சேலம் நோக்கி செல்லும் டவுன் பஸ்கள் நிற்க மேம்பாலத்தின் மேற்கு பகுதி சர்வீஸ் ரோட்டில் பயணிகள் இருக்கை வசதியுடன் நிழற்கூடம் உள்ளது. ஆனால் அங்கு டவுன் பஸ்கள் நிற்பதில்லை. அங்கிருந்து சற்று தூரம் சென்று மேம்பாலத்தின் அடியில் சாலை சந்திப்பு முனையில் பஸ்கள் நிற்கின்றன. அங்கு பயணிகள் நிற்க போதிய இட வசதி இல்லை. எனவே நிழற்கூடம் அருகே டவுன் பஸ்கள் நிற்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.