விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு, தளவாய்புரம் வழியாக தினசரி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தளவாய்புரத்திற்கு அருகிலேயே முகவூர் மற்றும் சேத்தூர் கிராமங்கள் அமைந்துள்ளன இக்கிராமங்களில் இருந்து சங்கரன்கோவிலுக்கு செல்ல போதிய பஸ் வசதிகள் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராமங்கள் வழியே சங்கரன்கோவிலுக்கு கூடுதலாக பஸ் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.