வெண்ணந்தூர் அடுத்து சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு அனைத்து பஸ்களும் கட்டாயம் பாலத்துக்கு கீழே சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.