திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அரசு பஸ் பணிமனையில் இருந்து சென்னைக்கு தினமும் 2 பஸ்கள் இயக்கப்படுகின்றன. விசேஷ மற்றும் பண்டிகைக் காலங்களில் சொந்த ஊருக்கு வந்து மீண்டும் சென்னை திரும்பும் பயணிகள் போதிய பஸ்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.