பஸ் வசதி தேவை

Update: 2026-10-25 16:17 GMT

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இருங்கலூர், புரத்தாக்குடி அருகே உள்ள கல்பாளையம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் பல நூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குமுளூர், புதூர் உத்தமனூர், தச்சங்குறிச்சி வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் கல்பாளையம் மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் கூடுதல் பயணங்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்