வாணியம்பாடியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள மாதகடப்பா பகுதியில் இருந்து வாணியம்பாடியை நோக்கி செல்லும் 15எம் என்ற அரசு பஸ் மாதகடப்பா, அண்ணா நகர், தும்பேரி உள்ளிட்ட ஊர்களின் வழியாக செல்கிறது. இதில் ஏராளமான மக்கள் பயணிக்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியவாறு செல்கின்றனர். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீதாராமன், மாதகடப்பா.