அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்

Update: 2026-10-25 19:18 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமம் ஒரு பேரூராட்சிக்கு இணையாக இருக்கும் ஊராகும். அங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். தூசியை சுற்றிலும் 10 கிராமங்கள் உள்ளன. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கல்வி, தொழில், மருத்துவத்துக்கு வெளியூர் செல்ல பஸ் ஏறுவதற்காக தூசி கிராமத்துக்கு வந்து தான் செல்ல வேண்டும். தூசி கிராமத்தில் எந்த ஒரு பஸ்களும் நிற்பது இல்லை. அதிவேகத்தில் சென்று விடுகின்றன. தூசி கிராமத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், தூசி. 

மேலும் செய்திகள்