உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?

Update: 2026-11-01 14:21 GMT

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி கிட்டாம்பாளையம் சாலையில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மழைக்காலத்தில் ஓடையில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. அது தரைப்பாலத்தை மூழ்கடித்து விடுகிறது. இதனால் அந்த வழியே போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்