தேனி நகர், சுப்பன்செட்டி தெருவில் அடிக்கடி வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.