நாமக்கல் புதிய பஸ் நிலையம் முதலைப்பட்டியில் அமைந்துள்ளது. பல்வேறு நகரங்களுகுகு பணி நிமித்தமாக செல்ல கூடிய மக்கள் இரவு நேரங்களில் நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் வந்து இறங்கினால் இரவில் மாநகருக்குள் வர போதிய பஸ் வசதி இல்லை. எனவே இரவு நேரங்களில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கும், நகரின் பிற பகுதிகளுக்கும் வந்து செல்ல கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.