வடலூர்- பண்ருட்டி சாலையில் உழவர் சந்தை அருகில் உள்ள தரைப்பாலம் பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் உள்ளது. குறுகிய பாலம் என்பதால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அதில் இடறி விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலத்தை அமைத்துத்தர வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.