திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளைக்குட்டையில் இருந்து நத்தம் வரை செல்லும் டவுன் பஸ் தடம் எண்: டி3 சரியான நேரத்தில் இயக்கப்படாத காரணத்தால் காலை 9 மணிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. எனவே அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பஸ்சை சரியான நேரத்தில் இயக்க வேண்டும்.
-கே.மூர்த்தி, சமூக ஆர்வலர், செவ்வாத்தூர்.