வடலூர் -பண்ருட்டி சாலையில் உழவர் சந்தைக்கு எதிரே சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. இந்த பாலமானது பராமரிப்பின்றி அதன் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. மிகவும் சேதமடைந்து உள்ள இந்த பாலமானது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்கிற நிலையில் இருக்கும் பாலத்தை இடித்த அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.