ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2026-06-28 17:02 GMT

நாமக்கல்-திருச்சி சாலையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி அருகே பயணிகள் நிழற்கூடம், சாலையோர பகுதிகளில் தள்ளுவண்டி கடைகள், வாகனங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும், திருச்சி சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்