நாமக்கல் பிரதான சாலையில் கோட்டை அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும் நேரத்திலும், வீடு திரும்பும் நேரத்திலும் பள்ளி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும் நேரத்திலும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்திலும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.