பனமரத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரளி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் அதிகாலை அறுவடை செய்யப்படும் அரளி பூக்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு தமிழகம், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பூ மூட்டைகளை ஏற்றி செல்லும் 50-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் பனமரத்துப்பட்டி வழியாக காலை 8 மணி முதல் 11 மணி வரை அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மக்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.