சேலம் மாவட்டம் தோளூர் பகுதிக்கு தினமும் 2 அரசு பஸ்கள் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சென்று வருகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த 2 பஸ்களும் சேதமடைந்து காணப்படுகின்றன. பஸ்சின் மேற்கூரை, படிக்கட்டுகள், இருக்கைகளில் சேதம் மிகுந்து காணப்படுகிறது. மேலும் பஸ்சில் இருக்கையின் கீழ்பகுதியில் சக்கரங்கள் சுற்றுவது அப்படியே தெரிகிறது. இது பயணிகளை மிகுந்த அச்சத்திற்குள்ளாக்குகிறது. எனவே பொதுமக்கள், பயணிகளின் நலன்கருதி சேதமடைந்து காணப்படும் பஸ்களை மாற்றி புதிய பஸ்களை இயக்க வேண்டும்.