பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க மிக கனரக வாகனங்கள் விஜயமங்கலம்-திங்களூர் சாலை வழியாக சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.