தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. இருப்பினும் பஸ் வந்து செல்லும் நேர அட்டவணை இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் பயண நேர அட்டவணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.