அந்தியூரில் இருந்து 20 சி என்ற அரசு பஸ் தினமும் மாலை 5.35 மணிக்கு கோபிக்கு இயக்கப்படும். ஆனால் இந்த பஸ் கடந்த 8 மாதங்களாக வாரத்தில் திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய 4 நாட்கள் மட்டும் மாலை 6.10 மணிக்கு காலதாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. 10 நிமிட இடைவெளியில் அடுத்த டவுன் பஸ் 20டி இயக்கப்படுகிறது. இதனால் மாலையில் சிறப்பு வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி 20சி அரசு பஸ்சை உரிய நேரத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.