வேலூர்-திருவண்ணாமலை இடையே முக்கிய நகரமாக உள்ள போளூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1 கோடியே 3 லட்சத்தில் ரவுண்டானா, சாலை அகலப்படுத்துதல், பஸ் நிலையம் உள்ளே புதிதாக கழிவுநீர் கால்வாய், குளியல் அறைகள் ஆகியவை புனரமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால் போளூர் பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் சிக்கி நகர முடியாமல் தவிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கலைஞர் சிலை அருகே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுமா?
-ராமர், போளூர்.