திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா நுழைவு வாயில் வரும் வழியில் சாலையோர காய், கனி உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மாலை நேரத்தில் அடிக்கடி போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. சாலையோரம் ஆக்கிரமித்து கடைகளை அமைத்து வருகின்றனர். இதனால் பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன்பு துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், திருவண்ணாமலை.