திருவண்ணாமலை தேரடி வீதியில் ஜோதி பூ மார்க்கெட் உள்ளது. அதன் முன்பு தினமும் காலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் பலர் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அருகில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையம், டவுன் போக்குவரத்துப் போலீஸ் நிலையம் இருந்தும் போலீசார் இதனை கண்டுகொள்வதே இல்லை. இது குறித்து மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து இடையூறுகளை சீர் செய்ய வேண்டும்.
-ராதா, திருவண்ணாமலை.