கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே அவுலூர்பேட்டைக்கு செல்லும் சாலையின் ஆரம்ப நிலையில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் நடக்கின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோருக்கு சிரமமாக உள்ளது. போலீஸ் நிலையம் எதிரே ஆட்டோக்களை நிறுத்தாமல், சற்று முன்னோக்கி நிறுத்த வழிவகை செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.பிரபாகரன், மேக்களூர்.