திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள கடலைக்கடை மூலை சந்திப்பு மற்றும் திருவூடல் தெருவில் பல்வேறு கடைகள் மற்றும் மார்க்கெட் உள்ளதால் அந்தப் பகுதியில் தினமும் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே அந்தப் பகுதிகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் போக்குவரத்துப் போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும்.
மூர்த்தி, திருவண்ணாமலை